'பொன்னியின் செல்வன்' படக்குழு வெளியிட்ட 'பொன்னி நதி' பாடலின் மேக்கிங் வீடியோ..!

'பொன்னியின் செல்வன்' படக்குழு 'பொன்னி நதி' பாடலின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது.
'பொன்னியின் செல்வன்' படக்குழு வெளியிட்ட 'பொன்னி நதி' பாடலின் மேக்கிங் வீடியோ..!
Published on

சென்னை,

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்"பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.

சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாடலான 'பொன்னி நதி' பாடல் வெளியானது. பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் எழுதி, ஏ.ஆர்.ரகுமான் பாடியிருந்த இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் 'பொன்னி நதி' பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 'பொன்னி நதி' பாடலின் அனுபவம் குறித்து நடிகர் கார்த்தி மற்றும் மாஸ்டர் பிருந்தா பகிர்ந்து கொள்ளும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com