''கிங்டம்'' ரிலீஸ் தேதி....தொடரும் குழப்பம்


Kingdom Release Date: Confusion Continues!
x
தினத்தந்தி 21 Jun 2025 7:00 AM IST (Updated: 7 July 2025 7:31 PM IST)
t-max-icont-min-icon

படம் ஏற்கனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டநிலையில், தற்போது 2 தேதிகளை படக்குழு பரிசீலித்து வருகிறது.

சென்னை,

விஜய் தேவரகொண்டாவின் ''கிங்டம்'' படத்தின் ரிலீஸ் தேதியில் குழப்பம் நீடித்து வருகிறது. தயாரிப்பாளர்கள் இன்னும் ரிலீஸ் தேதியை முடிவு செய்யாமல் உள்ளனர்.

படம் ஏற்கனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டநிலையில், தற்போது இரண்டு தேதிகளை படக்குழு பரிசீலித்து வருகிறது. அந்த தேதிகளில் ஒன்று ஜூலை 25, மற்றொன்று ஆகஸ்ட் 1. ஆனால் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், படக்குழு நாளை படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பவன் கல்யாணின் "ஹரி ஹர வீரமல்லு" படத்தின் புதிய ரிலீஸ் தேதி இன்னும் சற்று நேரத்தில் (காலை 7.23) அறிவிக்கப்பட உள்ளநிலையில், ''கிங்டம்'' படக்குழு நாளை தங்கள் படத்தின் அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கவுதம் தின்னனுரி இயக்கி இருக்கும் "கிங்டம்" படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

1 More update

Next Story