பிடித்த படங்களை பட்டியலிட்ட "தில்ருபா" நடிகர்

'ராஜா வாரு ராணி காரு' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் கிரண் அப்பாவரம்.
Kiran Abbavaram lists his recent favorite films
Published on

சென்னை,

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் கிரண் அப்பாவரம். இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'ராஜா வாரு ராணி காரு' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'கா' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இப்படத்தையடுத்து, இவர்என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். கதாநாயகியாக ருக்சார் தில்லான் நடிக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனர் விஸ்வா கருண் இயக்கி இருக்கிறார். மேலும், ரவி, ஜோஜோ ஜோஸ், ராகேஷ் ரெட்டி மற்றும் சரேகாமா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படம் வருகிற 14-ம் தேதி ஹோலி பண்டிகைக்கு வெளியாக உள்ளது. தற்போது படத்தின் புரமோசனில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில், புரமோசனின்போது, கிரண் அப்பாவரமிடம் பிடித்த படங்கள் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர், "மெய்யழகன், புஷ்பா 2 மற்றும் குண்டூர் காரம்" என்று பதிலளித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com