டோலிவுட் காதல்: கிரண் அப்பாவரம்- ரகஸ்யா கோரக் திருமண நிச்சயதார்த்தம்

டோலிவுட் காதல்: கிரண் அப்பாவரம்- ரகஸ்யா கோரக் திருமண நிச்சயதார்த்தம்
Published on

நடிகை ரகஸ்யா "சர்பத்" என்ற தமிழ்படத்தில் நடித்தவர் ஆவார். கிரண் அப்பாவரம் "எஸ்ஆர் கல்யாண மண்டபம்," "மீட்டர்" மற்றும் "ரூல்ஸ் ரஞ்சன்" போன்ற தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

ஐதராபாத்ததில் உள்ள தனியார் ரிசார்ட்டில் நேற்று கிரண் அப்பாவரம்-ரஹஸ்யா கோரக் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் மாலை மற்றும் மோதிரங்களை மாற்றிக்கொண்டனர். இவர்களது திருமணம்  ஆகஸ்ட் மாதம் வெளிநாட்டில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இவர்கள் இருவரும் ரவி கிரண் கோலா இயக்கிய "ராஜா வாரு ராணி காரு" படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானவர்கள். இந்தப் படம் உருவாகும் போதே இவர்களின் காதல் மலர்ந்தது.

ஐந்தாண்டு கால காதல் திருமணத்தின் மூலம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் இந்த திருமண நிச்சயதார்த்தத்திற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com