யுக்தி தரேஜா நடித்த 'கே-ராம்ப்' பட டிரெய்லர் வெளியீடு

இப்படம் வரும் 18-ம் தேதி வெளியாகிறது
Kiran Abbavaram’s K-Ramp trailer: Non-stop entertainment
Published on

சென்னை,

கிரண் அப்பாவரம் நடிப்பில் கடந்தாண்டு வெளியான 'கா' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து தில்ருபா திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அப்படம் எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

தற்போது இவர் 'கே-ராம்ப்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஹாச்யா மூவீஸ் மற்றும் ருத்ரான்ஷ் செல்லுலாய்ட் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தை ஜெயின்ஸ் நானி இயக்குகிறார்

யுக்தி தரேஜா கதாநாயகியாக நடிக்கும் இப்படம் வரும் 18-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com