"பண்ணை வீட்டுக்கு வந்தால் ரூ.25 லட்சம்" - நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு

சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை பண்ணை வீட்டிற்கு வருமாறு அழைத்ததாக தெரிவித்துள்ளார்.
"பண்ணை வீட்டுக்கு வந்தால் ரூ.25 லட்சம்" - நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு
Published on

ஐதராபாத்,

திரையுலகில் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வரும் ‘காஸ்டிங் கவுச்’ விவகாரம், தற்போது நடிகை கிரக் சீதா அளித்துள்ள பேட்டியால் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

பிக்பாஸ் தெலுங்கு சீசன் 8 நிகழ்ச்சியின் போட்டியாளரும் நடிகையுமான கிரக் சீதா, சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை பண்ணை வீட்டிற்கு வருமாறு அழைத்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், அதற்கு சம்மதித்தால் ரூ.25 லட்சம் வழங்குவதாக ஆசை காட்டியதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், அந்த தரக்குறைவான ஆபரை தாம் உடனடியாக நிராகரித்துவிட்டதாக சீதா தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய அவர், “வாய்ப்புகளுக்காக எந்த கீழ்மட்டத்திற்கும் செல்லத் துணியும் சிலர் சினிமாவில் இருக்கிறார்கள். திறமையை நம்பி வரும் பெண்களை இத்தகைய நபர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள்,” என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

கிரக் சீதாவின் இந்த தைரியமான பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவரது இந்த குற்றச்சாட்டு டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com