முன்பு ஓட்டலில் வேலை...இப்போது ஒரு படத்திற்கு ரூ. 60 கோடி சம்பளம் - யார் அந்த நடிகர் தெரியுமா?


முன்பு ஓட்டலில் வேலை...இப்போது ஒரு படத்திற்கு ரூ. 60 கோடி சம்பளம் - யார் அந்த நடிகர் தெரியுமா?
x
தினத்தந்தி 12 Sept 2025 5:03 PM IST (Updated: 12 Sept 2025 5:16 PM IST)
t-max-icont-min-icon

1967-ம் ஆண்டு டெல்லியில் பிறந்த இவர், நடிகராவதற்கு முன்பு பாங்காக்கிற்குச் சென்றார்.

சென்னை,

தற்போது பாலிவுட் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இவர் இருக்கிறார். 1967-ம் ஆண்டு டெல்லியில் பிறந்த இவர், நடிகராவதற்கு முன்பு, பாங்காக்கிற்குச் சென்றார். அங்கு அவர் ஓட்டலில் பணியாற்றினார். பின்னர் மும்பைக்கு வந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவர் வேறு யாருமல்ல...அக்சய் குமார்தான்.

1991-ம் ஆண்டு வெளியான ''சவுகந்த்'' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார் அக்சய் குமார். தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு, பல சிரமங்களைச் சந்தித்து ஒரு நட்சத்திர ஹீரோவாகி இருக்கிறார். தற்போது, ​​அக்சய் குமார் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோக்களில் ஒருவர். ஒவ்வொரு படத்திற்கும் அவர் ரூ. 60 கோடிக்கு மேல் சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது.

அவர் இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்திருந்தார், தற்போது ''பூத் பங்களா'', பிரியதர்ஷன் இயக்கத்தில் ''ஹெவன்'' ஆகிய படங்களில் அக்சய் குமார் நடித்து வருகிறார்.

1 More update

Next Story