தாத்தா, அப்பா, மகன்...மூன்று தலைமுறை ஹீரோக்களுடன் நடித்த ஒரே கதாநாயகி - யார் தெரியுமா..?


Know this... this heroine who acted with three generations of heros nageshwararao, nagarjuna, naga chaitanya and akhil
x
தினத்தந்தி 15 Sept 2025 12:58 PM IST (Updated: 15 Sept 2025 1:36 PM IST)
t-max-icont-min-icon

ஒரு காலத்தில் கதாநாயகியாக தமிழில் தொடங்கி பாலிவுட் வரை தனது நடிப்பால் மக்களின் இதயங்களை வென்றவர்.

சென்னை,

அக்கினேனி நாகேஸ்வரராவ் முதல் அக்கினேனி அகில் வரை...தாத்தா, அப்பா, மகன் என மூன்று தலைமுறை ஹீரோக்களுடன் நடித்த ஒரே கதாநாயகி யார் தெரியுமா..? ஒரு காலத்தில் அவர் தமிழில் தொடங்கி பாலிவுட் வரை தனது நடிப்பால் மக்களின் இதயங்களை வென்றார்.

அவர் வேறு யாருமல்ல...ரம்யா கிருஷ்ணன்தான். ஒரு காலத்தில் படங்களில் முன்னணி கதாநாயகியாக இருந்த இவர், இப்போது துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, நாகார்ஜுனா, வெங்கடேஷ் போன்ற நட்சத்திர ஹீரோக்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

1983-ம் ஆண்டு தொடங்கி இதுவரை ஐந்து மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில், படையப்பா, படிக்காதவன், பஞ்சதந்திரம், கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார்.

அக்கினேனி நாகேஸ்வரராவ் முதல் அக்கினேனி அகில் வரை தாத்தா, அப்பா, மகன் என மூன்று தலைமுறை ஹீரோக்களுடன் ரம்யா கிருஷ்ணன் நடித்திருக்கிறார் .

அக்கினேனி நாகேஸ்வர ராவுடன் இட்டாரு இட்டாரே, சூத்திரதாருலு போன்ற படங்களில் பணியாற்றினார். நாகார்ஜுனாவுடன் சங்கீர்தனா, ஹலோ பிரதர், அன்னமய்யா போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

நாக சைதன்யாவுடன் சைலஜா ரெட்டி அல்லுடு படத்தில் மாமியார் வேடத்திலும், பங்கர்ராஜு படத்தில் பாட்டி வேடத்திலும் நடித்தார். ஹலோ படத்தில் அகிலின் அம்மாவாக நடித்திருந்தார். இவ்வாறு மூன்று தலைமுறை ஹீரோக்களுடனும் நடித்து ரம்யா கிருஷ்ணன் சாதனை படைத்திருக்கிறார்.

1 More update

Next Story