கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா: ரஜினிகாந்த் பங்கேற்க வாய்ப்பு

32-வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா, டிசம்பர் 16 முதல் 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா: ரஜினிகாந்த் பங்கேற்க வாய்ப்பு
Published on: 

கொல்கத்தா,

இந்த விழாவில் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் பிரபாஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

32-வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா, டிசம்பர் 16 முதல் 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழா, கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற விக்டோரியா நினைவிடத்தில் தொடங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

விழாவின் தலைமை ஆலோசகரும் நடிகருமான மிதுன் சக்ரவர்த்தி செய்தியாளர்களிடம் இது குறித்து கூறியதாவது: விக்டோரியா நினைவிடத்தில் சிவப்புக் கம்பள வரவேற்புடன் தொடக்க விழாவை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு பிரபல நடிகர்களின் கட்-அவுட்களும் இடம்பெற உள்ளன. விழாவில் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் பிரபாஸ் ஆகியோர் பங்கேற்க வாய்ப்புள்ளது. நடிகர்கள் அனுபம் கெர், கங்கனா ரனாவத், பரேஷ் ராவல் ஆகியோரையும் அழைக்கத் திட்டமிட்டுள்ளோம். ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் சர்வதேசத் திரைப்படத் துறையைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் விழாவுக்கு அழைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.

வழக்கமாக நவம்பர் மாதத்தில் நடைபெறும் இந்தத் திரைப்பட விழா, இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சர்வதேசத் திரைப்படங்கள் விழாவில் திரையிடுவதற்காகப் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. வங்காளத் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் உத்தம் குமார் நடித்த திரைப்படங்கள் இந்த விழாவின் கவனம் ஈர்க்கும் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1995-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கொல்கத்தா திரைப்பட விழா, இந்தியாவின் மூன்றாவது பழமையான சர்வதேச திரைப்பட விழாவாகும்.மேற்கு வங்க அரசின் கீழ் உள்ள மேற்கு வங்க திரைப்பட மையத்தால் இந்த விழா நடத்தப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com