

சென்னை,
தமிழில் இயக்குனர் மற்றும் நடிகரான சேரன் மற்றும் நடிகைகள் சினேகா, கோபிகா ஆகியோரது நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற திரைப்படம் ஆட்டோகிராப். இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே... என்ற பாடல் மக்களை அதிகம் ஈர்த்தது.
இந்த பாடலில், கண் பார்வையற்ற நிலையிலும் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து சாதிக்கலாம் என்ற நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்த பாடல் மூலம் மிகவும் பிரபலமானவர் கோமகன். சமீபத்தில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார். அவரது மறைவுக்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதுபற்றி இயக்குனர் சேரன் வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில், வார்த்தைகள் இல்லை... மனதிலும் குரலிலும் முழுக்க தன்னம்பிக்கை கொண்ட மனிதர்... அவருடைய குழுவில் உள்ள 25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கியவர்.. காலையில் எழுந்ததும் கேள்விப்பட்ட இந்த செய்தி நெஞ்சை நொறுக்கியது.. கோமகனின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்.. என தெரிவித்து உள்ளார்.