தமிழில் கால்பதிக்கும் ’ஹிட் 3’ பட நடிகை

மதுரையில் உள்ள உசிலம்பட்டி பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
தமிழில் கால்பதிக்கும் ’ஹிட் 3’ பட நடிகை
Published on

சென்னை,

தெலுங்கு நடிகை கோமலி பிரசாத் தமிழில் அறிமுகமாக உள்ளார்.

சரண்ராஜ் இயக்கத்தில் கோமலி பிரசாத் நடிக்கும் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கி இருக்கிறது.

இந்த படம் தனது வாழ்க்கையில் ஒரு முக்கியமான மற்றும் புதிய அத்தியாயம் என்று கோமலி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ரசிகர்களின் அன்பும் ஆசீர்வாதமும் எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Also Read
நடிப்பை விட்டு விலகுகிறேனா?...இளம் நடிகை சாடல்
தமிழில் கால்பதிக்கும் ’ஹிட் 3’ பட நடிகை

பெண்ணை மையப்படுத்திய கதையாக ‘மண்டவெட்டி’ உருவாகி வருகிறது. தற்போது, மதுரையில் உள்ள உசிலம்பட்டி பகுதியில் மண்டவெட்டியின் படப்பிடிப்பு நடந்து வருகிறது

இந்த படம் கோமலி பிரசாத்தின் வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல். அவர் ஏற்கனவே 'நெப்போலியன்', 'ரவுடி பாய்ஸ்', 'செபாஸ்டியன் பிசி 524', 'ஹிட் செகண்ட் கேஸ்', 'ஹிட் 3', 'சஷிவதானே சித்தலு' போன்ற தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். தற்போது , 'மண்டவெட்டி' மூலம் தமிழ்த் திரையுலகில் தனது திறமையை நிரூபிக்கத் தயாராகி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com