கொம்பாரி வேட்டைப்புலி... 'கேப்டன் மில்லர்' படத்தின் புதிய பாடல் வெளியானது..!

'கேப்டன் மில்லர்' திரைப்படம் வருகிற 12-ந்தேதி வெளியாக உள்ளது.
கொம்பாரி வேட்டைப்புலி... 'கேப்டன் மில்லர்' படத்தின் புதிய பாடல் வெளியானது..!
Published on

சென்னை,

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. மேலும், 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் 'கில்லர் கில்லர்', 'உன் ஒளியிலே' மற்றும் 'கோரனாரு' என்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் இந்த படத்தின் 'கொம்பாரி வேட்டைப்புலி' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

விவேக் எழுதியுள்ள இந்த பாடலை தீ பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'கேப்டன் மில்லர்' திரைப்படம் வருகிற 12-ந்தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com