'கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் ' அனைவரும் சிரித்து மகிழும்படியான படம் - நடிகை பூஜிதா

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 2 தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
சென்னை,
விசாகப்பட்டினத்தில் பிறந்தவர் நடிகை பூஜிதா. தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் இவர் பவன் கல்யாண் நடிக்கும் ஹரிஹர வீர மல்லு படத்தில் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் தமிழில் இவர் ''கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் ' படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை உன்னை நான் சந்தித்தேன்,உதயகீதம் ,உயிரே உனக்காக, நினைவே ஒரு சங்கீதம் போன்ற திரைப்படங்களை இயக்கிய வெற்றி இயக்குனர் கே.ரங்கராஜ் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். கதாநாயகனாக ஸ்ரீகாந்த் நடிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 2 தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில் நடிகை பூஜிதா பேசுகையில்,
'பல திரைப் பிரபலங்களுடன் இங்கு இருப்பது மிக மகிழ்ச்சி. இந்தப்படம் மிக அற்புதமாக வந்துள்ளது, அனைவரும் சிரித்து மகிழும்படியான காமெடி எண்டர்டெயினர் படம். ரங்கராஜ் சார் மிக அழகாக படத்தை எடுத்துள்ளார். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும்" என்றார்.






