ஸ்ரீகாந்த்தின் "கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்" டிரெய்லர் வெளியீடு
ஸ்ரீகாந்த் நடித்துள்ள “கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்” படம் வரும் 14ம் தேதி வெளியாகிறது.
சென்னை,
ஸ்ரீ கணபதி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படத்திற்கு "கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்" என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தை உன்னை நான் சந்தித்தேன்,உதயகீதம் ,உயிரே உனக்காக, நினைவே ஒரு சங்கீதம் போன்ற திரைப்படங்களை இயக்கிய வெற்றி இயக்குனர் கே.ரங்கராஜ் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார்.
இந்த படத்தின் கதாநாயகனாக ஸ்ரீகாந்த் நடிக்க, கதாநாயகியாக பூஜிதா நடித்துள்ளார். இரண்டாவது நாயகனாக பரதனும் இரண்டாவது நாயகியாக நிமி இமானுவேலும் நடித்துள்ளனர். மேலும், பார்கவ் , நம்பிராஜன், கே.ஆர்.விஜயா, டெல்லி கணேஷ், சச்சு, நளினி, பருத்திவீரன் சுஜாதா, சிங்கம் புலி, ரமேஷ் கண்ணா, சாம்ஸ், அனுமோகன், வினோதினி, கவியரசன், மாஸ்டர் விஷ்னவா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் மை இந்தியா மாணிக்கம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 'கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்' படம் வரும் 14ம் தேதி வெளியாகிறது.







