கோட்டா சீனிவாச ராவ் மறைவு: சிரஞ்சீவி, வெங்கடேஷ் நேரில் அஞ்சலி

83 வயதாகும் கோட்டா சீனிவாச ராவ் ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.
ஐதராபாத்,
தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான 'சாமி' படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். அதே போல விஜய் நடித்த 'திருப்பாச்சி' படத்தில் கோட்டா சீனிவாச ராவ் ஏற்று நடித்த 'சனியன் சகடை' என்ற கதாபாத்திரமும் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக 750-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
சிலகாலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் 83 வயதாகும் கோட்டா சீனிவாச ராவ் ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கு திரையுலகினர் பலரும் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள் அந்த வகையில், நடிகர்கள், சிரஞ்சீவி, நாகார்ஜுனா, வெங்கட் உள்ளிட்டோர் கோட்டா சீனிவாச ராவ் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் கூறினர். தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.






