'கஸ்டடி' படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாபாத்திரம் அறிமுகம்

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் நாக சைதன்யா நடிக்கும் திரைப்படம் 'கஸ்டடி'.
'கஸ்டடி' படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாபாத்திரம் அறிமுகம்
Published on

சென்னை,

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் நாக சைதன்யா நடிக்கும் திரைப்படம் 'கஸ்டடி'. இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனர் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

மேலும், இந்த படத்தில் சரத்குமார், அரவிந்த் சாமி, வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் 'கஸ்டடி' திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாப்பாத்திரத்தை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இந்த படத்தில் ரேவதி என்ற கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

'கஸ்டடி' திரைப்படம் வருகிற மே மாதம் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com