கிரித்தி சனோனின் பேச்சால் மகேஷ் பாபு ரசிகர்கள் அதிர்ச்சி


Kriti Faces Online Teasing After Mahesh Name Mix-Up
x

பாலிவுட்டில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக கிரித்தி சனோன் இருக்கிறார்.

சென்னை,

தெலுங்கு சினிமாவில் மிக உயரமான ஹீரோக்களின் பட்டியலில், பிரபாஸ் முதலிடத்தில் இருப்பார். தெலுங்கு சினிமாவில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே மிக உயரமான நடிகர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார். அவரைத் தொடர்ந்து, மகேஷ் பாபு இருப்பார்.

இருப்பினும், பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் சமீபத்திய ஒரு நேர்காணலில், தான் பணியாற்றிய உயரமான ஹீரோக்களை பற்றி பேசும்போது, ​​ஆச்சரியப்படும் விதமாக மகேஷ் பாபுவின் பெயரைத் தவிர்த்துவிட்டார். இது மகேஷ் ரசிகர்களை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

தற்போது பாலிவுட்டில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கும் கிரித்தி சனோன், சமீபத்தில் தனுஷுடன் இணைந்து நடித்த "தேரே இஷ்க் மே" திரைப்படம் மூலம் பெரிய வெற்றியைப் பெற்றார். அந்தப் படத்தில் அவரது அழகும் நடிப்பும் பெரும் பாராட்டைப் பெற்றது.

இந்நிலையில், ஒரு சிறப்பு நேர்காணலின் போது ​​கிரித்தி, தன்னை விட உயரம் குறைவான ஹீரோக்களுடன்தான் அதிகம் நடித்துள்ளதாக கூறினார். பிரபாஸ் மற்றும் அர்ஜுன் கபூர் மட்டுமே தன்னை விட உயரமானவர்கள் என்று அவர் குறிப்பிட்டார். ஆனால் மகேஷ் பாபுவுடன் ஏற்கனவே பணிபுரிந்ததை அவர் மறந்துவிட்டதாகத் தெரிகிறது.

கிரித்தி சனோன், மகேஷ் பாபுவுடன் "1: நேனோக்கடினே" என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், கிரித்தியின் நடிப்புக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story