"ராஷ்மிகாவிடம் அந்த பழக்கமே இல்லை" - கீர்த்தி சனோன்

’காக்டெய்ல் 2’ படத்தில் ஷாஹித் கபூர், கீர்த்தி சனோன் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
"ராஷ்மிகாவிடம் அந்த பழக்கமே இல்லை" - கீர்த்தி சனோன்
Published on

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன். சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்துகொண்ட அவர், சக நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்துப் புகழ்ந்து பேசினார்.

அவர் பேசுகையில், "ராஷ்மிகா மிகவும் நேர்மையான மற்றும் அன்பான நபர். அவரிடம் துளியும் பொறாமை கிடையாது," என்றார். மேலும், ராஷ்மிகாவைச் சுற்றி எப்போதும் ஒரு பாசிட்டிவ் வைப் (Positive aura) இருப்பதாகவும், அவருடன் படப்பிடிப்பு தளத்தில் நேரத்தைச் செலவிடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Also Read
“அப்படிப்பட்ட படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்” - மனம் திறந்த நடிகை பரியா
"ராஷ்மிகாவிடம் அந்த பழக்கமே இல்லை" - கீர்த்தி சனோன்

ஹோமி அதாஜானியா இயக்கும் ’காக்டெய்ல் 2’ படத்தில் ஷாஹித் கபூர், கீர்த்தி சனோன் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படம் வரும் ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தத் திரைப்படம் ராஷ்மிகா மந்தனாவிற்கு ஐந்தாவது பாலிவுட் படம் என்பதும், ஷாஹித் கபூருடன் கீர்த்தி சனோன் இணையும் இரண்டாவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com