பேண்டஸி படத்தில் இணையும் யாமி கவுதம் - கீர்த்தி சனோன்


Kriti Sanon & Yami Gautam likely to star in a fantasy film
x
தினத்தந்தி 8 Oct 2025 8:45 PM IST (Updated: 8 Oct 2025 8:46 PM IST)
t-max-icont-min-icon

இருவரும் இதற்கு முன்பு ஒரே படத்தில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை,

ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் காதல் படமான தேரே இஷ்க் மெய்ன் படத்தில் கீர்த்தி சனோன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் நவம்பர் 28-ம் தேதி வெளியாக உள்ளது.

இதற்கிடையில், ஆனந்த் எல் ராய் தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இது ஒரு பேண்டஸி படமாக இருக்கும் என்று தெரிகிறது.

தற்காலிகமாக நயி நவேலி என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த படத்தில், கீர்த்தி சனோன் மற்றும் யாமி கவுதம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இருவரும் இதற்கு முன்பு ஒரே படத்தில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story