

மும்பை,
பாலிவுட் நடிகை கிரித்திகா காம்ரா (37) மற்றும் பிரபல தொகுப்பாளரான கவுரவ் கபூர் (44) விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இந்தாண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவர்களது திருமணம் மும்பையில், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் பங்கேற்கும் வகையில் எளிமையாக நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து கிரித்திகா காம்ராவும், கவுரவ் கபூரும் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இருப்பினும், திருமணத்திற்கான ஆரம்ப ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.