'குபேரா' படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'குபேரா' படம் வருகிற ஜூன் 20-ம் தேதி வெளியாக உள்ளது.
'குபேரா' படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது மும்பை தாராவியை மையமாக வைத்து அரசியல் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ராஷ்மிகா, ஜிம் சரப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஜூன் 20-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படக்குழுவினர் படத்தின் புரமோஷன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற ஜூன் 1-ந் தேதி சென்னையில் உள்ள ஸ்ரீ சாய் ராம் கல்லூரியில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com