சினிமா துறையில் சந்தித்த நிராகரிப்புகள்...அனுபவத்தை பகிர்ந்த ''குபேரா'' இயக்குனர்


Kubera Director shares his experience of rejections in the film industry
x
தினத்தந்தி 8 July 2025 11:05 AM IST (Updated: 8 July 2025 12:46 PM IST)
t-max-icont-min-icon

கடந்த 2006-ம் ஆண்டு தான் இயக்கிய ''கோதாவரி'' படத்தை சித்தார்த் நிராகரித்ததாக சேகர் கம்முலா கூறினார்.

சென்னை,

தனுஷ் நடித்த ''குபேரா'' படத்தின் மூலம் பெரிய வெற்றியைப் பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா, சினிமா துறையில் சந்தித்த நிராகரிப்புகளை பற்றி பேசினார்.

அவர் கூறுகையில்,''யாராவது என் படங்களை நிராகரித்தால் நான் ஒருபோதும் கோவப்படவோ (அ) வெறுப்படையவோ மாட்டேன்.

என்னால் ஒரு சிறந்த படத்தை கொடுக்க முடியும் என்று கூற முடியும். ஆனால், அந்த படம் நடிகர்களுக்கு புகழைக் கொண்டுவரும் அல்லது அவர்களுக்கு நட்சத்திர அந்தஸ்தை கொடுக்கும் என்று சொல்ல முடியாது'' என்றார்.

கடந்த 2006-ம் ஆண்டு தான் இயக்கிய ''கோதாவரி'' படத்தை சித்தார்த் நிராகரித்ததாக கூறிய சேகர், தொடர்ந்து, மகேஷ் பாபுவை சந்திக்க முயற்சித்ததாகவும், ஆனால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறினார். பின்னர் அந்த கதாபாத்திரத்தில் சுமந்த் நடித்ததாக குறிப்பிட்டார்.

1 More update

Next Story