''குபேரா'' படத்தின் முதல் நாள் வசூல்...ராயனை விட குறைவா?

தனுஷின் நடிப்புக்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து பாராட்டு குவிந்து வருகிறது.
சென்னை,
தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த ''குபேரா'' படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்.
நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான இப்படத்தில் தனுஷின் நடிப்புக்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து பாராட்டு குவிந்து வருகிறது.
நல்ல விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் முதல் நாளில் ரூ.13 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தனுஷ் நடிப்பில் கடைசியாக திரையரங்குகளில் வெளியாகி இருந்த ''ராயன்'' திரைப்படத்தை விட குறைவாகும். ராயன் படம் ரூ. 15.7 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ''குபேரா'' படத்தின் அதிகாரபூர்வ வசூல் விவரம் வெளியான பிறகே இது குறித்து தெரிய வரும்.
Related Tags :
Next Story






