“குறளரசன் மதம் மாறி விட்டார்” - டி.ராஜேந்தர் தகவல்

குறளரசன் மதம் மாறி விட்டார் என டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
“குறளரசன் மதம் மாறி விட்டார்” - டி.ராஜேந்தர் தகவல்
Published on

டி.ராஜேந்தரின் இளைய மகனும், நடிகர் சிம்புவின் தம்பியுமான குறளரசன் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தற்போது இசையமைப்பாளராக இருக்கிறார். சிம்பு நடித்து திரைக்கு வந்த இது நம்ம ஆளு படத்துக்கு குறளரசன் இசையமைத்து இருந்தார். மேலும் சில படங்களுக்கு இசையமைக்கவும் பேச்சுவார்த்தை நடக்கிறது.

இந்த நிலையில் குறளரசன் தனது தந்தையும் டைரக்டருமான டி.ராஜேந்தர், தாய் உஷா ஆகியோருடன் சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவுக்கு சென்றார். அங்கு அவர் இஸ்லாம் மதத்துக்கு மாறி விட்டதாக தகவல் வெளியானது. இதுசம்பந்தமான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த வீடியோ திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் தர்காவுக்கு ஒரு வேண்டுதலுக்காக சென்று இருந்ததாக குறளரசன் தெரிவித்தார்.

இந்த நிலையில் குறளரசன் இஸ்லாம் மதத்துக்கு மாறி விட்டதை டி.ராஜேந்தர் நேற்று உறுதிப்படுத்தினார். அவர் கூறும்போது, எனது மகன் குறளரசன் இஸ்லாம் மதத்துக்கு மாறியது உண்மைதான். எம்மதமும் சம்மதம் என்ற அடிப்படையில் எனது மகன் முடிவுக்கு மதிப்பளித்து இருக்கிறேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com