குருவியார் கேள்வி-பதில்கள்

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார் குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:- குருவியார், தினத்தந்தி சென்னை-600007.
குருவியார் கேள்வி-பதில்கள்
Published on

குருவியாரே, விஜய்அஜித் ஆகிய இரண்டு பேரில் யார் மூத்தவர்? யார் இளையவர்? இருவருக்கும் இடையே நட்பு எப்படி இருக்கிறது? (விக்ரம், சென்னை)

அஜித் மூத்தவர். விஜய் இளையவர். இரண்டு பேரும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். விஜய்யை என் தம்பி என்று அஜித் பாசத்துடன் குறிப்பிடுகிறார். என் நண்பர் அஜித் என்று விஜய் அன்புடன் குறிப்பிடுகிறார்!

***

ஜோதிகா நடித்து அடுத்து திரைக்கு வரயிருக்கும் படம் எது? அது என்ன மாதிரியான படம்? (ராம்குமார், காஞ்சிபுரம்)

ஜோதிகா நடித்து அடுத்து திரைக்கு வரும் படம், பொன்மகள் வந்தாள். இது, துணிச்சல் மிகுந்த ஒரு பெண்ணையும், அவர் குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களையும் பற்றிய படம்!

***

குருவியாரே, ஸ்ரீதிவ்யா அழகாகவே இருக்கிறார். நன்றாக நடிக்கவும் செய்கிறார். அவருக்கு ஏன் மார்க்கெட் இல்லை? (எம்.சுதர்சன், வாலாஜாப்பேட்டை)

அழகும், நடிப்பு திறமையும் மட்டும் போதாது. கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும் என்று ஸ்ரீதிவ்யா பற்றி பேசப்படுகிறது!

***

மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் சில நடிகர்கள் இரண்டு ஷிப்ட் அல்லது மூன்று ஷிப்ட் நடிக்கிறார்களாமே...இப்போதைக்கு அப்படி தூக்கமே இல்லாமல் நடிப்பவர்கள் யார்யார்? (எச்.பாட்ஷா, மேட்டூர்)

தூங்குவதற்கு நேரமே இல்லாத அளவுக்கு பிஸியாக நடித்து வந்தவர், யோகி பாபு. திருமணத்துக்கு பின்பு அவரும் மாறி விட்டார். குறிப்பிட்ட சில மணி நேரங்களே நடிக்கிறாராம்!

***

குருவியாரே, தமிழ் பட உலகில் முதன்முதலாக ஒரு கோடி ரூபாய்க்கு வியாபாரமான படம் எது? அதில் கதாநாயகனாக நடித்தவர் யார்? டைரக்டர் யார்? (இரா.தமிழ்செல்வன், தஞ்சை)

படம்: தாவணி கனவுகள். அந்த படத்தில் கதாநாயகனாக நடித்து டைரக்டு செய்தவர், கே.பாக்யராஜ்!

***

விஜய்யின் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் மாளவிகா மோகனன், வட மாநிலத்தை சேர்ந்தவரா? அவர் எந்த மொழி படத்தில் அறிமுகமானார்? (ஏ.கே.ஜவகர், அவினாசி)

மாளவிகா மோகனன், கேரளாவை சேர்ந்தவர்! மலையாள படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்!

***

குருவியாரே, சமந்தா சில மாதங்கள் ஓய்வு எடுக்கப் போகிறாராமே...என்ன காரணம்? (சா.பிரதாப், கரூர்)

கர்ப்பமாக இருப்பவர், ஆடி ஓடி வேலை செய்ய முடியாது. உருண்டு புரண்டு நடிக்க முடியாது. சமந்தா கர்ப்பமாக இருப்பதாக சொல்லப்படுகிறது!

***

பார்த்திபனுக்கு ரசிகர்கள் அதிகமா? ரசிகைகள் அதிகமா? (எஸ்.ஸ்ரீதர், மதுரவாயல்)

ரசிகர்களுக்கு இணையாக ரசிகைகள் இருக்கிறார்களாம்!

***

குருவியாரே, முன்னாள் கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தி எங்கே வசிக்கிறார்? அவருக்கு எத்தனை பிள்ளைகள்? (வி.தட்சிணாமூர்த்தி, கோவூர்)

டிஸ்கோ சாந்தி, ஐதராபாத்தில் வசிக்கிறார். அவருக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்!

***

ஓஹோ...ஹோ...ஓடும் மேகங்களே... என்ற பாடல் இடம்பெற்ற படம் எது? பாடலை பாடியவர் யார், பாடல் காட்சியில் நடித்தவர் யார்? (க.சந்தோஷ், அரும்பாக்கம்)

அந்த பாடல் இடம் பெற்ற படம், நீலவானம். பாடியவர், பி.சுசீலா. நடித்தவர்கள்: நடிகர் திலகம் சிவாஜிகணேசன்தேவிகா!

***

குருவியாரே, அஞ்சலி, ஓவியா ஆகிய இருவரில், கவர்ச்சி தாரகை என்று யாருக்கு பட்டம் கொடுக்கலாம்? (சஞ்சீவ்குமார், காட்பாடி)

அஞ்சலி ஆறு அடி பாய்ந்தால், ஓவியா பதினாறு அடி பாய்வார்! எனவே ஓவியாவுக்கே அந்த பட்டம் பொருந்தும்!

***

கடலோர கவிதை படத்தில் ஆசிரியை வேடத்துக்கு பொருந்திய ரேகா, இப்போது என்ன வேடத்துக்கு பொருந்துவார்? (வெ.மீனாட்சி சுந்தரம், மதுரை)

மூத்த ஆசிரியை வேடத்துக்கு கச்சிதமாக பொருந்துவார்!

***

குருவியாரே, மம்முட்டி, மோகன்லால் ஆகிய இருவரில், வில்லனாக அறிமுகமாகி கதாநாயகனாக உயர்ந்தவர் யார்? (டி.கிரி, மோகனூர்)

மோகன்லால்! மஞ்சில் விரிஞ்ச பூக்கள் என்ற படத்தில் மோகன்லால் வில்லனாக அறிமுகமானார்!

***

ரம்யாகிருஷ்ணன், கங்கனா ரணாவத் ஆகிய இரண்டு பேரில் ஜெயலலிதா வேடத்துக்கு பொருந்துபவர் யார்? (ராஜாராம், சேலம்)

முக சாயலிலும், நடிப்பிலும் ரம்யாகிருஷ்ணன் கூடுதல் மார்க் வாங்கி, கங்கனா ரணாவத்தை பின்னால் தள்ளிவிட்டார்!

***

குருவியாரே, அரவிந்தசாமி வில்லனாக நடிக்க எவ்வளவு சம்பளம் கேட்கிறார்? (எம்.ராம்சுந்தர், கம்பம்)

வில்லன், கதாநாயகன் என்ற பாரபட்சம் பார்க்காமல், எந்த வேடம் என்றாலும் சம்பளமாக ரூ.3 கோடி கேட்கிறார், அரவிந்தசாமி!

***

திரிஷா திருமணம் செய்து கொள்ள நிபந்தனை விதிக்கிறாராமே...அது என்ன நிபந்தனை? (பெருமாள்சாமி, ஸ்ரீரங்கம்)

மாப்பிள்ளையுடன் கலந்து பேசி, ஒருவரையொருவர் புரிந்துகொண்ட பிறகே திருமணம் செய்து கொள்வாராம்!

***

குருவியாரே, நடிகர் ரகுமானும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் உறவினர்களா? (சி.வெண்பா, கூடுவாஞ்சேரி)

இருவரும் சகலபாடிகள். அக்காள், தங்கையை திருமணம் செய்தவர்கள்!

***

சிம்புவுக்கு திருமண ஆசையே இல்லையா? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

ஆசையெல்லாம் இருக்கவே செய்கிறது. அவர் மனதை கவர்கிற மாதிரி மணப்பெண்தான் கிடைக்கவில்லையாம்!

***

குருவியாரே, அசின் மீண்டும் நடிக்கப்போவதாக தகவல் வெளியானதே...அது என்ன ஆனது? (பி.சண்முக பாண்டியன், விருத்தாசலம்)

அவருடன் ஜோடியாக நடித்த கதாநாயகர்கள் யாரும் ஜோடியாக நடிக்க உடன்படாததால், மறுபிரவேசம் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.

***

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com