

கமல்ஹாசன் நடித்து வந்த சபாஷ் நாயுடு படம் எந்த நிலையில் உள்ளது? (ப.சண்முகராஜ், சேலம்)
சபாஷ் நாயுடு படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்தது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது!
***
குருவியாரே, நயன்தாராவுக்கு சென்னையில் இரண்டு, மூன்று வீடுகள் இருந்தும் அவர் ஓட்டலில் தங்குகிறாராமே, ஏன்? (எம்.பால் துரைசிங், கோவை)
நயன்தாரா இப்போதெல்லாம் அந்த மலையாள ஜோதிடர் என்ன சொல்கிறாரோ, அதன்படியே நடந்து கொள்கிறாராம். தங்குகிற இடத்தை கூட வாஸ்து, ராசி பலன் பார்த்துதான் முடிவு செய்கிறாராம்!
***
சிவகார்த்திகேயன்சமந்தா முதன்முதலாக ஜோடி சேரும் படத்தில், சமந்தாவுக்கு என்ன வேடம்? (ஆர்.பாலாஜி, திருச்சி)
அந்த படத்தில், சமந்தா துணிச்சல் மிகுந்த புரட்சிகரமான பெண்ணாக நடிக்கிறார். படத்தில் அவர் சிலம்பம் ஆடுவது போல் காட்சி வருகிறது. இதற்காக அவர் சிலம்ப கலையை கற்று வருகிறார்!
***
குருவியாரே, விஜய் சேதுபதி சொந்தமாக தயாரிக்கும் மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் அப்படியென்ன சிறப்பு அம்சம் இருக்கிறது? (வி.சாய்ராம், பெங்களூரு)
விஜய் சேதுபதி நடிக்க வந்த சமயத்தில், 7 வருடங்களுக்கு முன்பு கேட்ட கதை அது. என் கையில் பணம் வந்த பிறகு நானே தயாரிக்கிறேன் என்று அந்த டைரக்டரிடம் கொடுத்த வாக்குறுதியை விஜய் சேதுபதி காப்பாற்றி இருக்கிறார். இதுவரை தமிழ் திரையுலகம் பார்க்காத கதை இது என்று படக்குழுவினர் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்!
***
ஆர்யா சமீபகாலமாக நீளமான பெரிய மீசையுடன் காணப்படுகிறாரே... என்ன விஷயம்? (ஏ.சாந்தகுமார், நாகர்கோவில்)
ஆர்யா, சங்கமித்ரா படத்தில் நடிப்பதற்காக இப்போதே தயாராகி விட்டார். அதற்காகவே அந்த நீளமான பெரிய மீசை வளர்த்து வருகிறார்!
***
குருவியாரே, முன்னாள் கனவுக்கன்னி சிம்ரன் இப்போது என்ன செய்கிறார்? (என்.தமிழ்மணி, கரூர்)
சிம்ரன், இரண்டாவது ரவுண்டுக்கு தயாராகி விட்டார். இனிமேல் அவரை அக்கா, அண்ணி, இளமையான அம்மா வேடங்களில் பார்க்கலாம்!
***
கவர்ச்சி நாயகிகள் எத்தனை பேர் வந்தாலும் நமீதாவுக்கு ஈடுஇணை அவர்தானே? (கே.பிரேம்குமார், பண்ருட்டி)
வாஸ்தவமான பேச்சு. பண்ருட்டி பலாப்பழம் போல...!
***
குருவியாரே, வேலைக்காரன் படத்தில் சினேகா தொடர்பான காட்சிகள் முழுமையாக படமாக்கப்பட்டு விட்டதா? (ஏ.டேவிட், வேதாரண்யம்)
சினேகா தொடர்பான காட்சிகளும், சிவகார்த்திகேயன்நயன்தாரா தொடர்பான பாடல் காட்சிகளும் விரைவில் படமாக்கப்பட உள்ளன!
***
தெலுங்கு படங்களில் நடித்து வரும் சத்யராஜ், கன்னட படங்களிலும் நடிப்பாரா? (ஜெ.திலக், ஓசூர்)
கட்டப்பா மாதிரி கதாபாத்திரம் கிடைத்தால், மொழி வேறுபாடு பார்க்காமல் எல்லா மொழி படங்களிலும் அவர் நடிப்பாராம்!
***
குருவியாரே, தென்மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கிய சீனுராமசாமி அடுத்து யாரை இயக்குகிறார்? அந்த படத்தின் பெயர் என்ன? (மா.மாலா, குள்ளே கவுண்டன் புதூர்)
சீனுராமசாமி அடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். அந்த படத்தின் பெயர், மாமனிதன்!
***
சுந்தர் சி.யின் அடுத்த படமான சங்கமித்ராவில் கதாநாயகி ஹன்சிகாவாமே? (வே.கவுதம், பெரம்பூர்)
சங்கமித்ராவுக்காக ஹன்சிகாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது உண்மை. ஆனால், அவர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை!
***
குருவியாரே, ஐஸ்வர்யாராய் ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் மார்க்கெட்டில் இருக்கிறாரே, எப்படி? (எஸ்.அன்பழகன், வாலாஜாப்பேட்டை)
அவர் இன்னமும் உலக அழகிக்கான அடையாளங்களுடன் இருப்பதுதான் அந்த ரகசியம்!
***
நடிகர் டெல்லி கணேஷ் எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் அறிமுகமான படம் எது? (வி.மைதீன் பாட்சா, இடலாக்குடி)
டெல்லி கணேஷ், திருநெல்வேலியை சேர்ந்தவர். அவர் அறிமுகமான படம், பட்டண பிரவேசம்!
***
குருவியாரே, கேத்தரின் தெரசாவுக்கு தமிழ் தெரியுமா? (எம்.ரகு, கோவில்பட்டி)
கேத்தரின் தெரசாவுக்கு தமிழ் தெரியும். ஆனால், தமிழில் பேச மாட்டார். ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவார்!
***
நடிகை ராதா நடித்த முதல் படம் எது? (த.நேரு, வெண்கரும்பூர்)
அலைகள் ஓய்வதில்லை!
***
குருவியாரே, சிபிராஜ் முத்த காட்சியில் நடிக்க மறுக்கிறாராமே... அவர் யாருக்கு பயப்படுகிறார்? (டி.ஸ்டீபன் பால்ராஜ், புதுச்சேரி)
சிபிராஜ் அவருடைய மகன் தீரனுக்கு பயப்படுகிறார். தீரனுக்கு 4 வயது ஆகிறது!
***
கீர்த்தி சுரேஷ் சொந்த படம் தயாரிப்பாரா? (எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு)
கீர்த்தி சுரேசின் தந்தையே ஒரு தயாரிப்பாளர்தான். பல மலையாள படங்களை தயாரித்து இருக்கிறார்!
***
குருவியாரே, பிரபு நடித்த 100வது படம் எது? அந்த படத்தின் இயக்குனர் யார்? (எஸ்.அர்ஷத் பயாஸ், குடியாத்தம்)
பிரபுவின் 100வது படம், ராஜகுமாரன். அந்த படத்தின் இயக்குனர், ஆர்.வி.உதயகுமார்!
***
அஜித் நடித்து வரும் விவேகம் படம் எந்த நிலையில் உள்ளது? படம் எப்போது திரைக்கு வரும்? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)
விவேகம் பட வேலைகள் முடிவடையும் நிலையில் உள்ளது. படம், ஆகஸ்டு மாதம் திரைக்கு வரும்!
***