அகோரி வேடத்தில் குட்டி ராதிகா

தமிழில் ‘இயற்கை’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான குட்டி ராதிகா, வர்ணஜாலம், மீசை மாதவன் ஆகிய படங்களில் நடித்தார்.
அகோரி வேடத்தில் குட்டி ராதிகா
Published on

தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போதைய கர்நாடக முதல்மந்திரி குமாரசாமிக்கும், தனக்கும் திருமணம் முடிந்து விட்டதாக 2010ல் அறிவித்தார். 2006ல் ரகசியமாக இந்த திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு ஷாமிகா என்ற மகள் இருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு குட்டி ராதிகா மீண்டும் சினிமாவுக்கு வந்துள்ளார். தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் தயாராகும் பைராதேவி என்ற பக்தி படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அகோரியாக வருகிறார். அவரது தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.

அதில் சடைமுடி, உடல் முழுக்க திருநீறு, கையில் சூலாயுதம், கழுத்தில் ருத்திராட்ச மாலை என்று வித்தியாசமான அவரது தோற்றம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. அகோரி தோற்றத்துக்காக தினமும் 4 மணிநேரம் மேக்கப் போட்டு நடிப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர். திகில் படமாக தயாராகிறது. ரமேஷ் அரவிந்த், ரங்காயன ரகு, ரவிசங்கர், சுசித்ரா பிரசாத் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். ஸ்ரீஜெய் டைரக்டு செய்கிறார்.

இதன் படப்பிடிப்பு காசியில் நடக்கிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சத்தில் தயாராகிறது. இது தவிர மேலும் 3 கன்னட படங்களிலும் குட்டி ராதிகா நடித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com