'சிக்கந்தர்' படத்திற்கு வாழ்த்து கூறிய 'எல்2 எம்புரான்' இயக்குனர்


L2 Emburaan director congratulates Sikandar
x

பிருத்விராஜ், சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படத்திற்கு வாழ்த்து கூறி இருக்கிறார்.

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'லூசிபர்'. இந்த படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி இருக்கிறது. இந்த படத்திற்கு 'எல் 2 எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

இப்படம் நாளை உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளநிலையில், தற்போது படக்குழு புரமோசனில் ஈடுபட்டுவருகிறது. அந்த நிகழ்வில், இப்பட இயக்குனர் பிருத்விராஜ், சல்மான் கான் நடித்துள்ள சிக்கந்தர் படத்திற்கு வாழ்த்து கூறி இருக்கிறார்.

அவர் கூறுகையில், 'இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களில் சல்மான் கான் சாரும் ஒருவர். ஏஆர் முருகதாஸ் சார் இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள பெரிய படமான 'சிக்கந்தர்' ரம்ஜான் அன்று திரைக்கு வருகிறது. படக்குழுவுக்கு எனது வாழ்த்துக்கள்' என்றார்.

1 More update

Next Story