'என்னால் 1 நிமிடம் கூட சிரிப்பை அடக்க முடியாது, அடக்க முயன்றால்...'- நடிகை லைலா


Laila on her laughter struggles
x

ஆதி நடிப்பில் வெளியாகி இருக்கும் ’சப்தம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் லைலா நடித்திருக்கிறார்.

சென்னை,

நடிகை லைலா, விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த 'கள்ளழகர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, பிதாமகன், நந்தா, உள்ளம் கேட்குமே போன்ற வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமானார்.

கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படத்தில் நடித்த இவர், தற்போது ஆதி நடிப்பில் வெளியாகி இருக்கும் சப்தம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், தான் சிரிப்பு நோயால் அவதிப்படுவதாக லைலா கூறி இருக்கிறார். அதன்படி, தான் சிரிக்கும் நோயால் அவதிப்பட்டதாகவும், தன்னால் சிரிப்பதை நிறுத்தவே முடியாது என்றும், நிறுத்த முயன்றால், கண்களில் இருந்து கண்ணீர் வழியும் என்றும் கூறினார்.

பிதாமகன் படப்பிடிப்பின்போது ஒரு நிமிடம் சிரிக்காமல் இருக்குமாறு விக்ரம் சவால் விடுத்ததை நினைவு கூர்ந்த அவர், தன்னால் 30 வினாடிகள் கூட சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், இதனால் வந்த கண்ணீர் மேக்கப்பை முற்றிலும் கெடுத்து விட்டது என்றும் கூறினார்.


1 More update

Next Story