“லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு” படத்தின் கதாபாத்திர அறிமுக அப்டேட்

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படம் உருவாகி வருவதாக இயக்குனர் தயாள் பத்மநாபன் கூறியுள்ளார்.
“லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு” படத்தின் கதாபாத்திர அறிமுக அப்டேட்
Published on

‘அனகனகா ஒ அதிதி’, ‘கொன்றால் பாவம்’, ‘மாருதிநகர் காவல்நிலையம்’ போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் தயாள் பத்மநாபன். இவர் தற்போது, உண்மை சம்பவமான லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கை மையமாக கொண்டு அதே பெயரில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெற்றி மாறன் சமீபத்தில் வெளியிட்டார். இதில், வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிஸ்ஸி ஆன்டனி, சரவணன், லொள்ளு சபா மாரண், இளவரசு மற்றும் கவிதா பாரதி ஆகியோர் நடித்துள்ளனர். ‘இந்த படம் ஒரு சாதாரண குற்றக் கதை அல்ல. இது தமிழ் சினிமா வரலாற்றில் நடந்த உண்மைச் சம்பவத்தை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பதிவு செய்கிறது’ என்று இயக்குனர் தயாள் பத்மநாபன் கூறியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஜனவரி மாதத்தில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் கதாபாத்திர அறிமுக புரோமோ வீடியோவை விஜய் சேதுபதி நாளை காலை 11:11 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com