"லால் சலாம்" நடிகையின் புதிய பட டிரெய்லர் வெளியீடு


தினத்தந்தி 16 Jun 2025 9:50 AM IST (Updated: 16 Jun 2025 9:56 AM IST)
t-max-icont-min-icon

"லால் சலாம்" நடிகை அனந்திகா நடித்துள்ள '8 வசந்தலு' படம் வரும் 20ம் தேதி வெளியாகிறது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் புஷ்பா 2. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்த இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இப்படத்தை தொடர்ந்து, இந்நிறுவனம், சன்னி தியோலின் ஜாத், நித்தினின் ராபின்ஹுட் உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறது. இது மட்டுமில்லாமல் '8 வசந்தலு' என்ற படத்தையும் தயாரிக்கிறது. பனீந்திர நரசெட்டி இயக்கும் இப்படத்தில் லால் சலாம் படத்தில் நடித்திருந்த அனந்திகா சனில்குமார் கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும், ரவி தேஜா துக்கிராலா, சுமந்த் நிட்டூர்கர், ஹனு ரெட்டி, கண்ணா பசுநூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டது. 'அந்தமா அந்தமா' பாடலை ஹேஷாம் அப்துல் வஹாப் மற்றும் ஆவணி மல்ஹர் பாடி உள்ளனர்.

இந்நிலையில் அனந்திகா நடித்துள்ள '8 வசந்தலு' படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் வரும் 20ம் தேதி வெளியாகிறது.

1 More update

Next Story