'லால் சலாம்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் - படக்குழு அறிவிப்பு

'லால் சலாம்'- திரைப்படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
'லால் சலாம்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் - படக்குழு அறிவிப்பு
Published on

சென்னை,

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் 'லால் சலாம்' திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com