நில மோசடி புகார்- நடிகர் மகேஷ் பாபுவுக்கு நோட்டீஸ்


Land scam complaint - Notice issued to actor Mahesh Babu
x
தினத்தந்தி 7 July 2025 10:37 AM IST (Updated: 7 July 2025 10:42 AM IST)
t-max-icont-min-icon

சாய் சூர்யா டெவலப்பர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பர தூதராக மகேஷ் பாபு பணியாற்றி வருகிறார்.

ஐதராபாத்,

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு மீண்டும் சிக்கலில் சிக்கியுள்ளார். ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக ரங்கா ரெட்டி மாவட்ட நுகர்வோர் மன்றம் மகேஷ் பாபுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சாய் சூர்யா டெவலப்பர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பர தூதராக மகேஷ் பாபு பணியாற்றி வருகிறார். இந்நிறுவனம், மகேஷ் பாபுவின் படத்தை காட்டி அங்கீகரிக்கப்படாத மனைகளை விற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பாதிக்கப்பட்டவர்கள் ரங்காரெட்டி மாவட்ட நுகர்வோர் ஆணையத்தை அணுகியதையடுத்து, சாய் சூர்யா டெவலப்பர்ஸ், அதன் உரிமையாளர் காஞ்சர்லா சதீஷ் சந்திரகுப்தா மற்றும் மகேஷ் பாபு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்களின் புரமோசனில் ஈடுபட்டதற்காக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரூ.3.4 கோடி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வருகிற 8-ம் தேதிக்குள் (நாளை) நுகர்வோர் மன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story