மறைந்த நடிகர் ராஜேஷின் கடைசி நிமிடங்கள்...உருக்கமாக பேசிய தம்பி


Late actor Rajeshs last moments...his brother spoke intimately
x

நடிகர் ராஜேஷ் நேற்று காலை உடல்நல குறைபாட்டால் காலமானார்.

சென்னை,

சினிமா துறையில் பல திறமைகளோடு சிறந்து விளங்கிய நடிகர் ராஜேஷ் நேற்று காலை உடல்நல குறைபாட்டால் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

இந்நிலையில், மறைந்த நடிகர் ராஜேஷின் கடைசி நிமிடங்களை பற்றி அவரது தம்பி உருக்கமாக பேசி இருக்கிறார். அவர் கூறுகையில், 'நன்றாகதான் பேசிக்கொண்டிருந்தார். காலை 6.45 மணிக்கு எனக்கு கால் செய்து, உடனே என் அறைக்கு வா, உன்னுடன் என் மகனையும் அழைத்து வா என்று சொன்னார். இப்படி அவர் எப்போதும் சொல்லியது கிடையாது , உடனே நானும் அவரது மகனும் அறைக்கு சென்றோம்.

நன்றாகதான் அமர்ந்து இருந்தார். இரவு முழுவதும் தூக்கம் இல்லை, சுவாசிக்க முடியவில்லை, என்னவென்று தெரியவில்லை. மருத்துவரை வீட்டிற்கு அழைத்து வா, என்னவென்று பார்க்கலாம் என்று கூறினார்.

நானும் உடனே மருத்துவரை அழைக்க சென்றேன். கொஞ்ச நேரத்தில் அண்ணன் பையன் கால் செய்து, திரும்ப வந்துவிடுங்கள். ஒன்னும் இல்லை என்றான். நானும் மருத்துவரை அழைக்காமலேயே வந்துவிட்டேன்.

அதன்பிறகு ஒரு சித்தா மருத்துவர் வந்தார். அவர் அண்ணனின் நண்பர். இருவரும் ரொம்ப நேரம் பேசினர். 1 மணி நேரத்திற்கு பிறகு , பழையபடி எனக்கு சுகமில்லை, ஒருமாதிரி இருக்கிறது. மருத்துவரிடம் செல்லலாம் என்றார்.

உடனே ஆப்புலன்ஸை அழைத்தோம். அது வந்தது. எழும்போது அப்படியே சாய்ந்தார். அதன்பிறகு ஸ்ட்ரெச்சரில் வைத்து கொண்டு செல்லும்போது, என்னையும் அண்ணன் பையனையும் பார்த்தார். கண் சொருகியது. அப்போதே நான் பயந்துவிட்டேன்.

உடனே வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால், பாதியிலேயே அவர் இறந்ததாக மருத்துவர்கள் கூறினார்கள்' என்றார்.

1 More update

Next Story