ராமர் தோற்றத்தில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்: வைரலாகும் ஏஐ படம் குறித்து தங்கை நெகிழ்ச்சி பதிவு

ராமர் வேடத்தில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் ஏஐ புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.
ராமர் தோற்றத்தில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்: வைரலாகும் ஏஐ படம் குறித்து தங்கை நெகிழ்ச்சி பதிவு
Published on

பெரும் பொருட்செலவில் பிரமாண்டமான முறையில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம் 'ராமாயணா'. நிதேஷ் திவாரி இயக்கியுள்ள இந்த படத்தில் ராமராக முன்னணி நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். சீதையாக சாய் பல்லவி நடித்துள்ளார். கேஜிஎப் புகழ் யாஷ் ராவணனாக நடித்துள்ளார்.

மேலும் சன்னி தியோல், ரவி துபே உள்ளிட்டோரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆஸ்கார் விருது வென்றவர்களான ஏ.ஆர். ரஹ்மான், ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அந்த டீசரை வைத்து ராமர் கதாபாத்திரத்தில் வேறு நடிகர்களை பொருத்தி ஏஐ காட்சிகளும் பரவி வருகின்றன.

அந்த வகையில், ராமர் வேடத்தில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் ஏஐ படம் பரவிய நிலையில், அவரது சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது:“ராமர் என்பவர் வெறும் ஒரு கதாபாத்திரம் இல்லை… நபரும் இல்லை… நேர்மை, தர்மம் என நாம் மதிக்கும் மதிப்புகளின் அடையாளம். சுஷாந்த் தெய்வீகமாகவும் கம்பீரமாகவும் தோற்றமளிப்பதோடு, ராமர் கொண்டிருக்கும் மனவலிமையையும் வெளிப்படுத்துகிறார். கண்களில் உள்ள பிரகாசமும், முகத்தில் உள்ள கம்பீரமும், சுஷாந்தைப் போல வேறு யாராலும் ராமராக நடிக்க முடியாது என்பதை காட்டுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com