மறைந்த நடிகை சரோஜா தேவியின் கண்கள் தானம் !


மறைந்த நடிகை சரோஜா தேவியின் கண்கள் தானம் !
x

மறைந்த நடிகை சரோஜா தேவியின் கண்கள் தானமாக வழங்கப்பட உள்ளது.

இந்திய திரைத்துறை வரலாற்றில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சரோஜா தேவி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இவரது 14 -ம் வயதில் மகாதேவி காளிதாசா என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் 1955 -ல் திரைத்துறைக்கு அறிமுகமானார். தமிழில் இவர் கடைசியாக சூர்யா நடித்த ஆதவன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை சரோஜா தேவி வயது முதிர்வு காரணமாக பெங்களூருவில் இன்று காலமானார். அவருக்கு வயது 87. சரோஜா தேவியின் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மறைந்த நடிகை சரோஜா தேவியின் கண்கள் தானமாக வழங்கப்பட உள்ளது. நாராயணா நேத்ராலயா என்ற மருத்துவமனையில் இருந்து கண்களை தானமாக பெற மருத்துவர்கள் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். கண்கள் தானமாக பெற்றப்பட்ட நிலையில், நாளை அவை 2 குழந்தைகளுக்குப் பொருத்தப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

1 More update

Next Story