'நீதித்துறையின் நேர்மையை குலைக்கும் வகையில் படம்' - நடிகர் அக்சய் குமாருக்கு எதிராக மனு

நடிகர் அக்சய் குமார் தற்போது 'ஜாலி எல்எல்பி 3' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
'நீதித்துறையின் நேர்மையை குலைக்கும் வகையில் படம்' - நடிகர் அக்சய் குமாருக்கு எதிராக மனு
Published on

மும்பை,

தமிழில் ரஜினிகாந்தின் '2.0' படத்தில் வில்லனாக நடித்துள்ள அக்சய்குமார் இந்தியில் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார். தற்போது 'ஜாலி எல்எல்பி 3' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

படத்தில் வக்கீல்கள் மற்றும் நீதிபதிகளை கேலி செய்து காட்சிகள் வைத்து இருப்பதாக கூறி படப்பிடிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அஜ்மீர் மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் சந்திரபான்சிங் ரத்தோட் கோர்ட்டில் புகார் மனு கொடுத்துள்ளார்.

நீதித்துறையின் நேர்மையை குலைக்கும் வகையில் படம் உள்ளது என்றும் எனவே படத்தில் நடித்துள்ள அக்சய்குமார் உள்ளிட்ட நடிகர்கள், இயக்குனர், தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டு உள்ளார். படக்குழுவினருக்கு கோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

வக்கீல் சந்திரபான் சிங் கூறும்போது, 'நீதித்துறையின் மாண்பை நடிகர்கள் உள்ளிட்ட திரையுலகினர் மதிப்பது இல்லை'' என்றார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com