‘பென்ஸ்’ படத்தில் ‘எல்சியு’ கதாபாத்திரங்கள் இடம்பெறும் - நடிகர் நிவின் பாலி

‘பென்ஸ்’ படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் அந்த பிரபஞ்சத்தைச் சேர்ந்தவை என நிவின் பாலி தெரிவித்துள்ளார்.

‘பென்ஸ்’ படத்தில் ‘எல்சியு’ கதாபாத்திரங்கள் இடம்பெறும் - நடிகர் நிவின் பாலி
Published on: 

சென்னை,

“பென்ஸ் படத்தின் கதையைப் பற்றி என்னால் எதையும் வெளிப்படுத்த முடியாது, ஆனால் இப்படம் எல்சியு-வுடன் தொடர்புடையது, இதில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் அந்த பிரபஞ்சத்தைச் சேர்ந்தவை" என பேட்டி ஒன்றில் நிவின் பாலி தெரிவித்துள்ளார்.

'லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்'

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் 'லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்' என்ற கான்செப்ட்டை தொடங்கி அதன் கீழ் பல படங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் இவர் இயக்கிய "கைதி, விக்ரம், லியோ" போன்ற படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. அந்த வரிசையில் அடுத்ததாக லோகேஷ் கைதி 2, ரோலக்ஸ் படங்களை இயக்க உள்ளார்.

வில்லனாக நிவின் பாலி

மேலும், லோகேஷ் கனகராஜின் ‘ஜி ஸ்குவாட்’ நிறுவனம் தயாரிப்பில் ‘பென்ஸ்’ படம் உருவாகி வருகிறார். பாக்கியராஜ் கண்ணன் இயக்கிய வரும் ‘பென்ஸ்’ படம் லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் (LCU)-ன் ஒரு பகுதியாக உருவாகி வருகிறது. இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் ரவி மோகன், மாதவன், சம்யுக்தா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். வில்லன் கதாபாத்திரத்தில் நிவின் பாலி நடித்து வருகிறார்.

எல்சியு-வில் ‘பென்ஸ்’ படம்

இந்த நிலையில், பேட்டி ஒன்றில் ரசிகர் கேள்விக்கு பதிலளித்த நடிகர் நிவின் பாலி, “பென்ஸ் படத்தின் கதையைப் பற்றி என்னால் எதையும் வெளிப்படுத்த முடியாது, ஆனால் இப்படம் எல்சியு-வுடன் தொடர்புடையது, இதில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் அந்த பிரபஞ்சத்தைச் சேர்ந்தவை, 'டில்லி' மற்றும் 'ரோலக்ஸ்' கதாபாத்திரங்களின் தீவிர ரசிகனான நானும் இந்தப் படத்தில் அவை இடம்பெறுவதை எதிர்பார்த்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com