மேடையில் கண்கலங்கிய ’லீடர்’ பட நடிகை

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேடையில் கண்கலங்கிய ’லீடர்’ பட நடிகை
Published on

ஐதராபாத்:

'பர்ஸ்ட் டைம் 01-01-01' (First Time 01-01-01) என்ற புதிய தெலுங்குத் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட 'லீடர்' பட நடிகை பாயல் ராஜ்புத், தனது தந்தையை நினைத்து மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

சவுரப் திங்க்ரா நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காகப் பாயல் ராஜ்புத் இவ்விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் தனது தந்தை குறித்து பேசும்போது உணர்ச்சிவசபட்டு மேடையிலேயே கண்கலங்கினார்.

Also Read
லோகேஷ் கனகராஜ் ஏன் வாக்களிக்கவில்லை? - ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்
மேடையில் கண்கலங்கிய ’லீடர்’ பட நடிகை

நடிகர் சவுரப் திங்க்ராவிற்கு ஆதரவாக வந்த இடத்தில், தனது தந்தையின் நினைவுகளால் பாயல் ராஜ்புத் நிலைகுலைந்து போனது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com