சிம்புவின் 'அரசன்' படத்தில் இணைந்த முன்னணி நடிகை

கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
சிம்புவின் 'அரசன்' படத்தில் இணைந்த முன்னணி நடிகை
Published on

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் புதிய படம், 'அரசன்'. வட சென்னை பின்னணியில் கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஆண்ட்ரியா, சமுத்திரகனி, விக்ராந்த், கிஷோர், சைத்ரா ஆர்ச்சர் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

தற்போது மதுரையில் நடைபெற்ற முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. கபடி விளையாட்டு வீரராக சிம்பு நடித்த காட்சிகளும் படமாக்கப்பட் டுள்ளன. 2-ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில் முன்னணி நடிகையான பிரியங்கா மோகனும் படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர 'டூரிஸ்ட் பேமிலி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள யோகலட் சுமியும் நடிக்கிறாராம். இந்த ஆண்டின் இறுதியில் படத்தை ரிலீசுக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com