"அரசியலுக்காக சினிமாவை விட்டு செல்வது சிறப்பான விஷயம்" - நடிகை யாஷிகா


Leaving cinema for politics is a great thing - Actress Yashika
x

தனியார் நகைக்கடையில் நடந்த கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை யாஷிகா கலந்துகொண்டார்.

திருச்சி,

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகை யாஷிகா, அரசியலுக்காக சினிமாவை விட்டு செல்வது சிறப்பான விஷயம் என்று கூறினார்.

திருச்சியில் ஒரு தனியார் நகைக்கடையில் நடந்த கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை யாஷிகா கலந்துகொண்டார். கண்காட்சிக்கு இடையே அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் அடுத்து நடிக்கவுள்ள திரைப்படம் குறித்து கேள்வியெழுப்பினர். அதற்கு அவர்,

'தற்போது டிடி ரிட்டன்ஸ் படம் வெளியாகி நன்றாக சென்றுக்கொண்டிருக்கிறது. அடுத்து ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க தயாராகி வருகிறேன். அது பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்' என்றார்.

தொடர்ந்து விஜய்யின் சினிமா வருகை பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில், 'அவருக்கு என் வாழ்த்துகள். எதுவுமே எளிது கிடையாது. ஒரு விஷயத்திற்காக மற்றொரு விஷயத்தை விட்டுதான் செல்ல வேண்டும். அரசியலுக்காக சினிமாவை விட்டு செல்வது சிறப்பான விஷயம்' என்றார்.

1 More update

Next Story