யூடியூப் சேனலுக்கு வக்கீல் நோட்டீஸ்; சோனம் கபூருக்கு குவியும் கண்டனம்

யூடியூப் சேனலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய சோனம் கபூருக்கு ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
யூடியூப் சேனலுக்கு வக்கீல் நோட்டீஸ்; சோனம் கபூருக்கு குவியும் கண்டனம்
Published on

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைளில் ஒருவர், சோனம் கபூர். இவர் தமிழ், இந்தியில் வெளியான 'ராஞ்சனா' படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து இருந்தார்.

சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் அவ்வப்போது கலந்துரையாடும் சோனம் கபூர், ஏடாகூடமான கேள்விகளுக்கும் நெத்தியடி பதிலை கூறுவார்.

இந்தநிலையில் சோனம் கபூரின் கணவர் ஆனந்த் அஹூஜா அணியும் உடைகள் குறித்து ராகினி எனும் பெண் தனது யூடியூப் சேனலில் சில கருத்துகளை கூறியிருந்தார். மேலும் சோனம் கபூர் - ஆனந்த் அஹூஜா ஜோடி குறித்தும் பேசியிருந்தார்.

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட அந்த யூடியூப் சேனலுக்கு சோனம் கபூர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீசை யூடியூபர் ராகினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

சோனம் கபூரின் இந்த நடவடிக்கைக்கு ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 'எத்தனையோ விமர்சனங்களை சிரித்தபடி ஏற்ற நீங்கள், இந்த சாதாரண விஷயத்திற்காக கோபம் கொள்வது சரியா?', என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சோனம் கபூர் நோட்டீஸ் அனுப்புவதற்கு முன்பாக ராகினியின் யூடியூப் சேனலுக்கு 7 ஆயிரம் பேர் மட்டுமே சப்ஸ்கிரைபர்களாக இருந்தனர். இந்த விவகாரத்துக்கு பிறகு அந்த எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கிக்கொண்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com