

சென்னை,
தமிழ்நாடு முழுக்க ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், லெஜண்ட் சரவணன் ஆட்டோ ஓட்டுனர்களுடன் ஆயுத பூஜையை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாகி வருகிறது.
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஆயுத பூஜை சிறப்பு பரிசை வழங்கிய லெஜண்ட் சரவணன் அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கொண்டாட்டத்தின் அங்கமாக, ஆட்டோ ஓட்டுனரின் ஆசைக்கு இணங்க லெஜண்ட் சரவணன் ஆட்டோ ஓட்டி மகிழ்ந்தார். மேலும் அங்கு கூடிய பலர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.