

சென்னை,
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ், கடந்த ஜூன் 27-ந் தேதி அன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. இவரது இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெற்றது.
இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கே.பாக்யராஜ் இல்லத்திற்கு வந்த நடிகர் லெஜண்ட் சரவணன், அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினார்.
மேலும், நடிகர் பாக்யராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து லெஜெண்ட் சரவணன் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் தலைசிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவரும், என் மீது பேரன்பும் பாசமும் கொண்டிருந்த பாக்யராஜின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது இழப்பு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.