லெஜண்ட் சரவணன் நடிக்கும் “லீடர்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர்’ படம் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகிறது.
லெஜண்ட் சரவணன் நடிக்கும் “லீடர்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

2022-ம் ஆண்டு வெளியான தி லெஜண்ட் படத்தை தொடர்ந்து, தொழில் அதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன், ‘லீடர்’ என்ற புதிய படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்து வருகிறார். எதிர்நீச்சல், கொடி, பட்டாசு, கருடன் உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார், இந்த படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத் நடிக்கிறார். மேலும், ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், லால், பாகுபலி பிரபாகர், அமிர்தா அய்யர், வி.டி.வி. கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்திற்கு, எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் இந்த படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், லெஜண்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர்’ படம் ஏப்ரல் 9ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தணிக்கை வாரியம் இப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com