லெஜண்ட் சரவணனின் அடுத்த படம்...ரிலீஸ் எப்போது? - வெளியான தகவல்


Legend Saravanan’s next film is planning for DEC 2025 Release
x

இப்படத்தை ‘கருடன்’ பட இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கி இருக்கிறார்.

சென்னை,

‘தி லெஜண்ட்’ படத்தை அடுத்து எதிர்நீச்சல், கொடி, பட்டாசு, கருடன் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் லெஜண்ட் சரவணன் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை பாயல் ராஜ்புத் , ஆண்ட்ரியா, நடிகர் சாம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இத்திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இப்படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்தநிலையில், தற்போது ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இப்படத்தை டிசம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story