பழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்

சென்னையில் பழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்.
பழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்
Published on

சென்னை,

தமிழ் திரையுலகில் பழம்பெரும் பின்னணி பாடகராக இருந்தவர் ஏ.எல். ராகவன். சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த அவருக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவரை உடனடியாக சென்னையில் உள்ள ராமசந்திரா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். எனினும், சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.30 மணியளவில் அவர் காலமானார். அவருக்கு வயது 87.

இவரது மனைவி நடிகை எம்.என். ராஜம். பல தசாப்தங்களாக பல்வேறு படங்களில் நடித்து புகழ் பெற்றவர். கடந்த 1947ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் மற்றும் சுதர்சனம் ஆகிய படங்களில் நடித்து தனது திரையுலக வாழ்க்கையை ஏ.எல். ராகவன் தொடங்கினார்.

அவர், சி.ஆர். சுப்புராமன், கே.வி. மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, எஸ்.எம். சுப்பையா நாயுடு உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ளார். இது தவிர்த்து விஜயகுமாரி என்ற படத்தில் குமாரி கமலாவுக்காக சிறுமி குரலிலும் ஏ.எல். ராகவன் பாடியுள்ளார். தனது இசை பயணத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் எண்ணற்ற பாடல்களை பாடியுள்ளார். அலைகள் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com