'மெய்யழகன்' திரைப்படத்தின் நீளம் குறைப்பு

'மெய்யழகன்' படத்தின் நீளம் தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தநிலையில், நீளத்தை குறைக்க படக்குழு முடிவெடுத்துள்ளது.
Length reduction of the movie 'Meiyazhagan'
Published on

சென்னை,

நடிகர் கார்த்தியின் 27-வது படமான 'மெய்யழகன்' படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் கார்த்தியுடன் முதல் முறையாக இணைந்து அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயப்ரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் வரும் 'நான் போகிறேன்' மற்றும் 'யாரோ இவன் யாரோ' என துவங்கும் இரு பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார்.

இப்படம் கடந்த 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவந்தாலும், நீளம் தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், படத்தின் நீளத்தை குறைக்க படக்குழு முடிவெடுத்துள்ளது. இது குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

படத்திலிருந்து 18 நிமிடங்கள் 42 வினாடிகள் நீக்கப்பட்டு, 2 மணி நேரம் 38 நிமிடங்களாக திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படம் தெலுங்கில் 'சத்யம்சுந்தரம்' என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com