தன்னை விட 29 வயது குறைந்த 19 வயது மாடல் அழகியுடன் டைட்டானிக் ஹீரோ காதல்...!

48 வயதான லியானார்டோ டிகாப்ரியோ, மாடல் அழகி ஈடன் பொலானியுடனான காதல் பற்றிய வதந்திகளால் டுவிட்டரில் டிரெண்டிங்கில் உள்ளார்.
தன்னை விட 29 வயது குறைந்த 19 வயது மாடல் அழகியுடன் டைட்டானிக் ஹீரோ காதல்...!
Published on

வாஷிங்டன்

லியோனார்டோ டிகாப்ரியோ அடுத்ததாக மார்ட்டின் ஸ்கோர்செஸியின் கில்லர்ஸ் ஆப் தி பிளவர் மூனில் நடித்து வருகிறார்.

லியோனார்டோ டிகாப்ரியோ, 19 வயதான இஸ்ரேலிய மாடல் அழகி ஈடன் பொலானியுடன் விருந்தில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளிவந்ததை அடுத்து, தன்னை விட வயது குறைந்த பெண்ணுடன் டேட்டிங் செய்வதாக செய்தி வைரலாகி உள்ளது.

48 வயதான லியானார்டோ டிகாப்ரியோ, மாடல் அழகி ஈடன் பொலானியுடனான காதல் பற்றிய வதந்திகளால் டுவிட்டரில் டிரெண்டிங்கில் உள்ளார்.

பாடகர் எபோனி ரிலேயின் இசை வெளியீட்டு விழாவில், ஈடனுடன் லியோனார்டோ அமர்ந்திருந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது 25 வது பிறந்தநாளுக்குப் பிறகு தனது நான்கு வருட காதலியான கமிலா மோரோனுடன் பிரிந்ததாக கூறப்படுகிறது.

டிகாப்ரியோ அல்லது பொலானியோ அவர்கள் காதலில் இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தவில்லை

25 வயதிற்குட்பட்ட பெண்களை மட்டுமே காதலிப்பதில் பெயர் பெற்ற டிகாப்ரியோ 1997 இல் வெளிவந்த "டைட்டானிக்" திரைப்படம் வெளிவந்த ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த பொலானியுடன் டேட்டிங் செய்ததாக சமூக ஊடகங்களில் வறுத்தெடுக்கப்பட்டதை அடுத்து அவருக்கு நெருக்கமானவர்கள் மறுப்பு தெர்வித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com