லியோ திரைப்படம் ஒரு வாரத்தில் ரூ.461 கோடி வசூல் - தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

லியோ திரைப்படம் முதல் வாரத்தில் உலக அளவில் ரூ.461 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
லியோ திரைப்படம் ஒரு வாரத்தில் ரூ.461 கோடி வசூல் - தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Published on

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் லியோ படம் கடந்த வாரம் வெளியானது. படம் வெளியானது முதலே ரசிகர்கள், திரையரங்குகளில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு படத்தை பார்த்து வருகின்றனர். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. எனினும், பல திரையரங்குகளில் ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டதால் 'லியோ' திரைப்படம் வசூல் சாதனை படைக்கும் என்று திரை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் 'லியோ' திரைப்படத்தின் முதல் வார வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, லியோ திரைப்படம் முதல் வாரத்தில் உலக அளவில் ரூ.461 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், தமிழ் சினிமா வரலாற்றில், முதல் வாரத்தில் அதிக வசூல் செய்து லியோ திரைப்படம் சாதனை படைத்துள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது

X

Daily Thanthi
www.dailythanthi.com